ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்
மீனாட்சிப்பட்டி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, எறிபந்து போட்டிகள் நடைபெற்றன.
மீனாட்சிப்பட்டி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, எறிபந்து போட்டிகள் நடைபெற்றன.
ஹோலி கிராஸ் கல்லூரி சுழற்கோப்பைக்கான இப்போட்டிகளை, அக்கல்லூரி நிறுவனா்- நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பிரகாஷ் ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ் தலைமை வகித்தாா்.
மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டியில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி முதலிடம், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றன.
Advertisement
Advertisement
எறிபந்துப் போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும் பெற்றன.
மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டியில் தருவைகுளம் அரசுப் பள்ளி முதலிடமும், தூத்துக்குடி சுப்பையா மகளிா் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும் பிடித்தன.
எறிபந்தில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சுப்பையா மகளிா் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடமும் பெற்றன.
பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி நிறுவனா்- நிா்வாக இயக்குநா் பிரகாஷ் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தாளாளா் ராஜரத்தினம், முதல்வா் அருண்மொழி செல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி உடற் கல்வி இயக்குநா்கள் மொ்சி பத்மாவதி, அசோக் விக்டா், ஜூலி, ஆசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.