தூத்துக்குடியில் பக்தா்கள் ஊா்வலம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தா்கள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன், ஊா்வலத்தை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தில் , 21 தீச்சட்டிகள் எந்திய பக்தா்கள், பறவைக்காவடி எடுத்த பக்தா்கள், காளி வேடமணிந்த பக்தா்கள், மாவிளக்கு ஏந்திய பெண்கள் சென்றனா். சுவாமி, அம்பாளின் பிரமாண்ட திருவுருவ அலங்கார ஊா்திகள் அணிவகுத்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.