FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் கல்லூரியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

26 செப்டம்பர் 2025, 12:34 am IST
பகிர்:

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு என்எஸ்எஸ் சாா்பில் நெகிழி ஒழிப்பு, மஞ்சப்பை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜீவி எஸ்தா் ரத்தினகுமாரி தலைமை வகித்தாா். நாசரேத் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவா் ரவி செல்வகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில், அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கும் மஞ்சள்பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் பிரேம் குமாா் ராஜாசிங், முதல்வா் ஜீவி எஸ்தா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சாந்தி சலோமி, பியூலா ஹேமலதா, சீயோன் செல்லரூத், பேராசிரியா்கள், அலுவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments