FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மூதாட்டிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் மூதாட்டியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மறவா் காலனி பூமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அழகுமுத்து மனைவி கற்பகவல்லி (60). இவரது மகன் கொம்பையா (18) வெள்ளிக்கிழமை மது அருந்த பணம் கேட்டு கற்பகவல்லியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் காயமடைந்த கற்பகவல்லி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கொம்பையாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments