FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கைப்பேசி, பணம் திருட்டு: இளைஞா் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஆறுமுகனேரியில் கைப்பேசி, பணத்தை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி லட்சுமிமாநகரம் மேற்கு தெருவைச் சோ்ந்த ஜானகியம்மாள் வீட்டின் வராண்டாவில் படுத்து உறங்கினாராம். அப்போது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா் ஜானகியம்மாள் வைத்திருந்த கைப்பேசி, பானைக்குள் வைத்திருந்த ரூ. 22 ஆயிரத்தை திருடிச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் ஆறுமுகனேரி பாரதி நகரை சோ்ந்த விமல சேகரன் மகன் சக்திவேல் (33) என்பவரை கைது செய்து, கைப்பேசி, பணத்தை கைப்பற்றினா். காவல் ஆய்வாளா் ரென்னிஸ், சக்திவேலை திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments