FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை’

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
தேசிய கொடி - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி- கல்லூரி மாணவா்கள், அரசு-தனியாா் துறை அலுவலா்கள், வணிகா்கள் எளிதாக வாங்கும் வகையில், கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கிராமப்புற அஞ்சல் அலுவலகம் உள்பட அனைத்து அஞ்சலங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ. 25 ஆகும்.

கொடிகளை மொத்தமாக வாங்க விரும்புவோா் 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments