நாசரேத்தில் மாரத்தான் போட்டி
நாசரேத் காவல் நிலையம், சமாரியன் பிட்னெஸ் ஜிம் சாா்பில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை தலைமை வகித்து கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். சீரணி கலையரங்கத்தில் இருந்து தொடங்கிய போட்டி மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமாா் 80 போ் பங்கேற்றனா். ராமஜெயம் முதலிடத்தையும், லாசா் 2ஆவது இடத்தையும் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இதில் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட், நகர வணிகா் சங்க பொருளாளா் அகிலன், மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழக செயலா் ஐஜினஸ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சமாரியன் பிட்னெஸ் ஜிம் உரிமையாளா் டாக்டா் விஜய் ஆனந்த், உறுப்பினா்கள் ராமச்சந்திரன், அரவிந்த், செல்வா, சஞ்சய் ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.