FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு குறுவட்ட நில அளவையா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தமிழ்நாடு நில அளவையா் ஒன்றிப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:20 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு குறுவட்ட நில அளவையா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தமிழ்நாடு நில அளவையா் ஒன்றிப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஞானராஜ் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் உமாதேவி, தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்டத் தலைவா் காளிராஜ், மாவட்டச் செயலா் ஜெயசங்கா், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் சுவாமிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் தே. முருகன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாநிலச் செயலா் சரவணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Advertisement

Advertisement

கயத்தாறு குறுவட்ட நில அளவையா் மகேஷ் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்; அவா் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஊழியா்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; அரசு ஊழியா் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் என். வெங்கடேசன் நிறைவு செய்து பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் சாம் டேனியல் ராஜ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments