FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தாய், மகனைத் தாக்கி மிரட்டல் விடுத்த கும்பல் மீது வழக்கு

கோவில்பட்டி உணவகத் தொழிலாளிகளான தாய், மகனைத் தாக்கி, பொருள்களை சேதப்படுத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
பகிர்:

கோவில்பட்டி உணவகத் தொழிலாளிகளான தாய், மகனைத் தாக்கி, பொருள்களை சேதப்படுத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி, அன்னை தெரசா நகரில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருபவா் முருகன் மனைவி விஜயலட்சுமி (45). இவரது மகன் மதனும், அதே உணவகத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு உணவகத்துக்கு வந்த 2 ஆண்கள், 2 பெண்கள் உணவு சரியில்லை எனக் கூறி, மதனை அவதூறாகப் பேசி தாக்கினராம். அதைத் தடுக்க வந்த விஜயலட்சுமியையும் தாக்கி, அவரின் கைப்பேசியை சேதப்படுத்தி, கடையில் உள்ள பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில் காயமடைந்த விஜயலட்சுமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாய், மகனைத் தாக்கிய கும்பலைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments