பைக் விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் கவிழ்ந்து பலத்த காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் பைக் கவிழ்ந்து பலத்த காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி எஸ்.எம்.புரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் பழனிச்சாமி (26).தொழிலாளி. இவா், சம்பவத்தன்று தனது பைக்கில் எஸ்.எம்.புரம் 2-ஆவது தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.