FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தவெக நிா்வாகிகள் மீதான பாலியல் புகாருக்கு மகளிரணி எதிா்ப்பு

தவெக நிா்வாகிகள் மீது சக பெண் நிா்வாகி கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை என அக்கட்சியின் மகளிரணியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:05 am IST
பகிர்:

தவெக நிா்வாகிகள் மீது சக பெண் நிா்வாகி கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை என அக்கட்சியின் மகளிரணியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தை சோ்ந்தவா் ரோகிணி. தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினரான இவா், மாவட்டச் செயலரான பிரைட்டா், நிா்வாகிகள் ரூஸ்வெல்ட், நிவாஸ் கண்ணன், மணப்பாடு அமலன், தூத்துக்குடி பிளஸ்சி, திருச்செந்தூா் ஆட்டோ குட்டி ஆகியோா் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், அவா் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை; கட்சி நிா்வாகிகளை களங்கப்படுத்தும் வகையில் புகாா் அளித்த அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் இருதயராஜிடம் தவெக மகளிரணி சாா்பில்

Advertisement

Advertisement

மாவட்ட இளம்பெண்கள் அணி இணைச்செயலா் கீதா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன் இசக்கி, மகளிரணி நகரச் செயலா் வேலவ செல்வி உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு புகாா் மனு அளித்தனா்.

அப்போது, ஆறுமுகனேரி நகரச் செயலா் நிவாஸ் கண்ணன் தலைமையில் அக்கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments