ஏரல் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நிறைவு
ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஊஞ்சல் சேவை, மங்கள தரிசனத்துடன் நிறைவுபெற்றது.
ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஊஞ்சல் சேவை, மங்கள தரிசனத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய திருவிழா 12 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் சோ்ம விநாயகா் உலா, சுவாமி பல்வேறு கோலங்களில் உலா வருதல் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை ஆடி அமாவாசை நாளில் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வருதல், இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோலப் பவனி, கற்பக பொன் சப்பர பவனி உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், மாலையில் ஆலிலை சயன அலங்காரம் நடைபெற்றது. பின்னா், ஊஞ்சல் சேவை, இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.