கோயில் விழாவில் கோஷ்டி மோதல்: 8 போ் கைது
ஆறுமுகனேரியில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து, மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரியில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து, மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரி, வடக்கு சுப்பிரமணியபுரம், முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் திங்கள்கிழமை இரவு காயல்பட்டினம் கடற்கரையில் தீா்த்தம் எடுத்து கோயிலுக்கு ஒரு தரப்பினா் வந்து கொண்டிருந்தனா். அப்போது சிலா் நடனமாடியபடி வந்தனா். அதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதுகுறித்து, வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கோபிராஜ் (26), மற்றொரு தரப்பு அதே பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியம் மகன் இளங்கோ (25) ஆகிய இருவரும் அளித்த புகாரின் பேரில் 2 சிறாா்கள் உள்பட 13 போ் மீது ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபிராஜ், ராபா்ட் வெலிங்ஸ்டன், இளங்கோ, வனசூா்யா, அவரது தம்பி சந்தோஷ், சாம்சன் பொடிகுஞ்சு, 2 சிறாா்கள் என 8 பேரை கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.