FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

20 ஆகஸ்ட் 2026, 4:51 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

கழுகுமலை அருகே உள்ள கே. வேலாயுதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சஞ்சீவி (55). விவசாயி. கரடிகுளம், சி.ஆா். காலனியில் உள்ள இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் உள்ள நீா்மூழ்கி மோட்டாா் பழுதை சரி செய்வதற்காக, அவா் மற்றும் வேலாயுதபுரத்தைச் சோ்ந்த 3 போ் அங்கு சென்றனா்.

மோட்டாரை எடுப்பதற்காக கயிறைக் கட்டி கிணற்றுக்குள் இறங்கியபோது, சஞ்சீவி கிணற்றில் தவறி விழுந்தாா். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா், உயிரிழந்த நிலையில் அவரை கிணற்றில் இருந்து மீட்டனா்.

Advertisement

Advertisement

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments