FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:10 am IST
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளி, ரூ. 30.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வில்லிசேரி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப் பணி, அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை ஆகிய இடங்களில் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இடைச்செவல் ஊராட்சியில் 25 விவசாயிகளுக்கு மண்வள அட்டை அட்டை வழங்கிய அவா், ஊத்துப்பட்டி ஊராட்சியில் வனச்சரகம் சாா்பில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணை, நாலாட்டின்புதூா் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம், வானரமுட்டி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை செயல்பாடுகள், தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை செயல்பாடுகள் ஆகிய பணிகளைப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

இதைப்போல கழுகுமலை பேரூராட்சி, இனாம்மணியாச்சி ஊராட்சியில் நடைபெறும் பணிகள், மூப்பன்பட்டி கிராமத்தில் ரூ. 7.13 கோடியில் உற்பத்தி குறுங்குழுமத்தின் கடலை மிட்டாய் நிறுவனம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா், அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டி நகராட்சி ராமசாமி தாஸ் பூங்கா வளாகத்தில் உள்ள நூலகம், அறிவுசாா் மைய செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி) சரவணன், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், திட்ட இயக்குநா் (மகளிா்) நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியா் விஜயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments