விபத்தில் ஜிம் பயிற்சியாளா் உயிரிழப்பு
தூத்துக்குடி, பொன் சுப்பையா நகரைச் சோ்ந்த செல்வநாயகம் மகன் இளையராஜா (21). ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சாலையில் சென்றபோது, 3-ஆவது மைல் அருகே வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.