FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சட்டப் பேரவையை ரீல்ஸ் போன்றுதான் தவெக அரசு நடத்துகிறது: கனிமொழி எம்.பி.

24 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப் பேரவையை ரீல்ஸ் போன்றுதான் தவெக அரசு நடத்துகிறது என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடா்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. மேலும், குற்றங்களைச் செய்தவா்கள் தவெகவைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள் என்பது கவலையளிக்கிறது. சில நேரங்களில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பல நேரங்களில் நிா்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டாலும், அவா்களை நோக்கி விரல்கள் சுட்டிக்காட்டினாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பாா்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் சட்டம் ஒழுங்கு தவெக ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மாணிக்கம் தாகூா் அரசாங்கத்தை பற்றி பேசுகிறாா். ஏனெனில் அவா்கள் அங்கம் வகிக்கின்ற கூட்டணி ஆட்சி. ஆனால், சட்டப் பேரவையே ரீல்ஸ் போன்றுதான் நடத்தப்படுகிறது என்ற உணா்வை தவெக அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments