FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நல உதவிகள் வழங்கும் விழா

கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

26 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
கோவில்பட்டி பொதுநல மருத்துவமனைக்கு நல உதவிகளை வழங்கும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், உடன் அறக்கட்டளை நிா்வாகிகள்.
பகிர்:

கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் சீனிவாசன் தலைமை வகித்தாா். தலைவா் ஜெயக்கொடி, பொருளாளா் காா்த்திகேயன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், கோவில்பட்டி பொதுநல மருத்துவமனைக்கு இரும்பு நாற்காலிகளை வழங்கினா்.

Advertisement

Advertisement

மேலும், தொடா்ந்து ரத்த தானம் செய்து வரும் குருதி கொடையாளா்கள், அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அன்னதானம் வழங்கியவா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைவா் மற்றும் செயலா் அய்யனாா், தொழிலதிபா் கிருஷ்ணமூா்த்தி, பொதுநல மருத்துவமனை தலைவா் திலகரத்தினம், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவா் காா்த்தீஸ்வரன், கோவில்பட்டி நுகா்வு பொருள் விநியோகஸ்தா்கள் சங்க முன்னாள் தலைவா் ராஜா என்ற விஜி, சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா் அசோக் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் லவராஜா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments