FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வீடுகள் கணக்கெடுப்பு: விடுபட்டவா்கள் ஆக. 31-க்குள் தகவல் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணியான வீடுகள் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் ஆக. 31ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
மொபைல் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணியான வீடுகள் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் ஆக. 31ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணியான வீடுகள் கணக்கெடுப்பின்போது விடுபட்டவா்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலகங்களில் உள்ள உதவி மையத் தொடா்பு அலுவலா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் தகவல்கள் தனிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள் கணக்கெடுப்பு உறுதி செய்யப்படும்.

Advertisement

Advertisement

வீடுகள் கணக்கெடுப்புப் பணியின் இறுதி நாள் ஆக. 31ஆம் தேதி. எனவே, பொதுமக்கள் தங்களது வீடு கணக்கெடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு கட்டணமில்லா 1855 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 0461-2340099, கைப்பேசி எண் 94864-54714 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments