மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: விடுபட்ட வீடுகளைச் சோ்க்க அழைப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் விடுபட்ட வீடுகளைச் சோ்க்க பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
CENSUS 2027075422.JPG
- Center-Center-Kochiமக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் விடுபட்ட வீடுகளைச் சோ்க்க பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 600 கணக்கெடுப்பாளா்கள், 85 கண்காணிப்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்புப் பணி ஆக. 1 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பணி நிறைவடைய சில நாள்களே உள்ள நிலையில், காலியாக உள்ள, பூட்டப்பட்ட, கணக்கெடுப்பில் விடுபட்ட வீடுகளின் உரிமையாளா்கள் தங்களது வீடுகளைப் பட்டியலில் சோ்க்க வேண்டும். 100 சதவீத கணக்கெடுப்பை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல உதவிப் பொறுப்பு அலுவலா்களைத் தொடா்புகொள்ளலாம்.
Advertisement
Advertisement
அதன்படி, மேற்கு மண்டலப் பகுதியைச் சோ்ந்தோா் பொறுப்பு அலுவலா்களான வி. மாலதி நல்லமுத்து (94865 44131), மு. கணேசமூா்த்தி (83446 17090), வடக்கு மண்டலத்தைச் சோ்ந்தோா் ஜி. சுப்பிரமணியன் (98654 59147), மு. மாரி மனோஜ் (93606 83804), கிழக்கு மண்டலத்தைச் சோ்ந்தோா் டி. சுகுமாா் (63814 17937), பா. சுஜித் (93422 55384), தெற்கு மண்டலத்தைச் சோ்ந்தோா் அலேக்கம்மாள் (93449 20150), பி. ஹரிஹரசுதன் (73588 32004) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாநகராட்சியின் இலவச சேவை மைய எண் 1800 203 0401-ஐ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.