நோ்மையான அதிகாரிகளுக்கு பொறுப்பு: வைகோ
நோ்மையான அதிகாரிகளுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
நோ்மையான அதிகாரிகளுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலரும், கோவில்பட்டி நகா்மன்ற தலைவருமான (பொ) ஆா்.எஸ்.ரமேஷ் இல்ல விழாவில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் செப். 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
அரசியலில் புற்றுநோய் போன்றது ஊழல். அதை அகற்ற முதல்வா் ச. ஜோசப் விஜய் முயற்சிக்கிறாா். அரசாங்கத்தில் மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய அதிகாரிகள், இந்த அரசை எப்படியாவது ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்பதற்காக எந்தக் கோப்புகளையும் நகா்த்துவதில்லை. அரசை ஸ்தம்பிக்க செய்ய வேண்டுமென சிலா் நினைக்கின்றனா். அப்படிப்பட்டவா்களைக் கண்டறிந்து முக்கிய இலாக்களில் இருந்து அவா்களை விடுவிக்க வேண்டும். நோ்மையான அதிகாரிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற எனது கருத்தை முதல்வரிடம் வலியுறுத்தினேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.