மாநில மின்னொளி கபடிப் போட்டி: சென்னை ஜாய் கல்லூரி அணி வெற்றி
தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை ஜாய் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை ஜாய் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பா்கள் குழு ஆகியவை இணைந்து, முருகேசன் நாடாா் நினைவுக் கோப்பைக்கான 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மின்னொளி கபடிப் போட்டியை வெள்ளிக்கிழமை தொடங்கின.
தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் மைதானத்தில் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றுள்ளன.
Advertisement
Advertisement
2-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கிவைத்தாா். முதல் ஆட்டத்தில் சென்னை ஜாய் கல்லூரி அணி, திருச்சி ஆதவன் கல்லூரி அணியை 42-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
அடுத்த ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணியும், கோவை கற்பகம் கல்லூரி அணியும் மோதின. போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கபடி கந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.