சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாலாட்டின்புதூா் மேட்டு தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் தொழிலாளி குணசீலன் (55). இவரது உறவினா் செல்வகுமாா் மகன் அபிஷேக் (19). இவா் படித்து வரும் சாத்தூா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பெற்றோா் சந்திப்பு கூட்டத்தில் குணசீலன் பங்கேற்றாராம். பின்னா் கூட்டம் முடிந்து, அபிஷேக், குணசீலன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினராம். இருசக்கர வாகனத்தை குணசீலன் ஓட்டினாராம்.
நாலாட்டின்புதூா்-கோவில்பட்டி அணுகு சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் நிலைகுலைந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதாம். இதில் குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், சடலத்தை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த அபிஷேக்கை சிகிச்சைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.