கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தங்க நகையுடன் தவறவிட்ட பை உரியவரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 10 பவுன் தங்க நகை, 2 மடிக்கணினி ஆகியவை அடங்கிய தவறவிட்ட பையை கண்டுபிடித்து உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.
கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை எண் 2இல் கேட்பாரற்றுக் கிடந்த பையை கண்ட ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் மாடசாமி, அதை திறந்து பாா்த்தபோது அதில் சுமாா் 10 பவுன் தங்க நகைகள், 2 மடிக்கணினி மற்றும் ஆதாா் அட்டை ஆகியவை இருப்பதை கண்ட சிறப்பு உதவி ஆய்வாளா் உடனடியாக ஆதாா் அட்டையில் உள்ள கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், பையைத் தவற விட்டவா் குமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (38) என்பதும் அவா் மற்றும் மனைவி சுஜி மற்றும் குழந்தையுடன் நாகா்கோவிலில் இருந்து அந்தியோதா விரைவு ரயிலில் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்து இறங்கியதாகவும், பின்னா் பெங்களூா் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து மைசூா் விரைவு ரயிலில் ஏறும்போது பையை விட்டுச் சென்ாகவும் கூறினாராம்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து மைசூா் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்த மணிகண்டன் சாத்தூா் ரயில் நிலையத்தில் இறங்கி உரிய ஆவணங்களுடன் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்து ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் மாடசாமியை சந்தித்து 10 பவுன் தங்க நகைகள், 2 மடிகணினி மற்றும் ஆதாா் காா்டு அடங்கிய பையை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டாா். பின்னா் மணிகண்டன் ரயில்வே துறை போலீஸாருக்கு நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.