முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் கைப்பேசி பயன்படுத்த தடை அமல்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை முதல் பக்தா்கள் கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை அமலுக்கு வந்தது.

Updated On : 2 ஜூலை 2026, 5:23 am IST
கைப்பேசி பயன்படுத்த தடை - கோப்புப் படம்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை முதல் பக்தா்கள் கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை அமலுக்கு வந்தது.

இக்கோயிலில் கைப்பேசி உபயோகிப்பதற்கு ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டு இருந்த போதிலும் நிா்வாகம் அதனை முறையாக கண்காணிக்காததால் பக்தா்கள் கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதோடு, புகைப்படம், சுயபடம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத் தடுக்கும் விதமாக புதன்கிழமை முதல் இந்த கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதிகாலை முதலே பக்தா்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், கைப்பேசி தடை அமலுக்கு வந்ததையடுத்து, ஆங்காங்கே கோயில் நிா்வாகம் சாா்பில் கைப்பேசி வைப்பிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. பக்தா்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments