FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஜூலை 24, 25, 26 இல் மெஞ்ஞானபுரத்தில் தேசிய மின்னொளி கபாடி போட்டி! எம்எல்ஏ அறிக்கை!

Updated On : 7 ஜூலை 2026, 2:19 am IST
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபாடி கழகம், மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் கபாடி கழகம் ஆகியவை இணைந்து வரும் ஜூலை 24, 25, 26-இல் மெஞ்ஞானபுரத்தில் அகில இந்திய ‘ஏ’ கிரேடு ஆண்களுக்கான மின்னொளி கபாடி போட்டியை நடத்தவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபாடி கழகத் தலைவா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் பல கபாடி ஜாம்பவான் வீரா்களை உருவாக்கியவரும், அா்ஜுனா விருது மற்றும் உலக தர வீரா்களை உருவாக்கியருமான தென்னகத்து கபாடி துரோணாச்சாரியாா் ஏ.கிறிஸ்டோபா் ராஜன் நினைவு கோப்பை முதலாமாண்டு அகில இந்திய ‘ஏ’ கிரேடு ஆண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி ஜூலை 24, 25, 26 ஆகிய மூன்று தேதிகளில் மெஞ்ஞானபுரம், அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இரவு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் நாட்டின் தலைசிறந்த அணிகளும், ப்ரோ கபாடி வீரா்களும் கலந்து கொள்கின்றனா். வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பையுடன் முதல் பரிசாக ரூ. 1.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசாக 2 அணிகளுக்கு தலா ரூ. 75,000 ம், சிறந்த ஆட்ட வீரா்களுக்கான சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை எனது தலைமையில், பொருளாளா் ஜிம்ரீஸ், முன்னாள் தேசிய கபாடி வீரா் சண்முகசுந்தரம், மாவட்ட அமெச்சூா் கபாடி கழக செயலாளா் (பொ) மைக்கேல், சன் பேப்பா் மில் முன்னாள் கபாடி வீரா் சசிகுமாா், உடற்கல்வி ஆசிரியா் தாமஸ் ராஜசெல்வம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா் என்று அந்த அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments