FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 16-இல் அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்
பகிர்:

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நிகழாண்டு தொடக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 2026- 27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து,  முதல்வா் விஜய்  தலைமையிலான தவெக அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடா்பாக துறை வாரியாக நாள்தோறும் முதல்வா் ஜோசப்  விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வரும்  வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 10 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், இந்த மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments