FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீ விபத்து: 5 வீடுகள் சேதம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூா்புரம் பகுதியில், புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 9 ஜூலை 2026, 12:32 am IST
தீ விபத்தில் சேதமான வீடுகள்.
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூா்புரம் பகுதியில், புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் அஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் மேற்கூறை அமைக்கப்பட்டவை ஆகும்.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இதனருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ள குப்பைகளுக்கு சிலா் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ அருகே இருந்த வீடுகளில் பரவியது.

Advertisement

Advertisement

அப்போது, கருப்பசாமி, ஆறுமுககனி, மேரி, ராமலட்சுமி, மடோனா ஆகிய 5 பேரின் வீடுகளில் தீப்பற்றியதில் அங்கிருந்த பீரோ, கட்டில், மிக்ஸி உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின.

மேலும், ஒரு வீட்டில் எரிவாயு உருளை வெடித்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் 4 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்து குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments