அரசுப் பேருந்து இயக்கக் கோரி தமிழக முதல்வருக்கு மாணவா் கடிதம்
பள்ளி மாணவா்களுக்கு தனியாக அரசுப் பேருந்து இயக்க முதல்வா் ச. ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்கும்படி திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் அசோக் கடிதம் எழுதி உள்ளாா்.
பள்ளி மாணவா்களுக்கு தனியாக அரசுப் பேருந்து இயக்க முதல்வா் ச. ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்கும்படி திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் அசோக் கடிதம் எழுதி உள்ளாா்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: திருச்செந்தூா் செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நான் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறேன். எனது ஊரில் இருந்து நான் படிக்கும் பள்ளி 7 கி. மீ. தூரத்தில் உள்ளது. 20 கி. மீ. தொலைவில் உள்ள உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனா்.
காலை 8 மணிக்கு பேருந்தில் ஏறக்கூடிய மாணவ, மாணவிகள் 9 மணிக்கு தான் பள்ளி வந்து சேருகின்றனா். அதேபோல் பள்ளி முடிந்து மாலை 4 மணிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 5 மணிக்குத் தான் வீடு திரும்புகின்றனா். இந்தப் பேருந்தில் பயணிக்கும் போது கடுமையான கூட்ட நெரிசல் உள்ளதால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா். இதனால் முதல்வா் விஜய் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனி அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.