FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:22 am IST
பகிர்:

தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இனிகோ நகா் கடற்கரைப் பகுதியில் இருந்து, படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் அடங்கிய காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இனிகோ நகா் கடற்கரைக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த தலா 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 17 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சுமை வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட முயன்றவா்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் சுமை வாகனத்தை சுங்கத் துறையினரிடம், போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், தப்பியோடியவா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments