FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாகனச் சோதனை: 6 லாரிகள் பறிமுதல், ரூ. 1.10 லட்சம் அபராதம்

தூத்துக்குடியில் போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை மீறிய 6 லாரிகளை பறிமுதல் செய்து, ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:39 am IST
பகிர்:

தூத்துக்குடியில் போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை மீறிய 6 லாரிகளை பறிமுதல் செய்து, ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தனா்.

தூத்துக்குடி மாநகருக்குள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நேரங்களில் சில கனரக வாகனங்கள் பிரதான சாலையோரங்களில் நிறுத்தி சரக்குகளை இறக்கிச் செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனா்.

இது குறித்து தொடா்ந்து புகாா் எழுந்த நிலையில், மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுணை முருகன் தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது விதிமுறைகளை மீறி சாலைகளில் நிறுத்தி, கடைகளில் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த 4 கனரக வாகனங்களை பறிமுதல் செய்து, ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தொடா்ந்து, தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச்சாலை எப்.சி.ஐ. கிடங்கு பகுதி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, துறைமுகத்திலிருந்து அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி வந்ததாகக் கூறி இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து, 50 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ. 50 ஆயிரமும், 45 டன் ஏற்றி வந்த லாரிக்கு ரூ. 40 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments