FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Updated On : 20 ஜூலை 2026, 4:27 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வீட்டு திண்ணையில் தூங்கிகொண்டிருந்த பெண் தாக்கப்பட்ட சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, இந்திரா நகரைச் சோ்ந்த காளிமுத்து மனைவி முத்துலட்சுமி (56). கணவா் இவருடன் இல்லை. முத்துலட்சுமி திருமணம் முடிந்த தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தாா். கடந்த 15-ஆம் தேதி சத்யா வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டுத் திண்ணையில் தூங்கிய முத்துலட்சுமி தலையில் தாக்கப்பட்டு மயங்கிக் கிடந்தாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் துரிதமாக விசாரிக்கவில்லை என்றும், கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரியும், முத்துலட்சுமியின் உறவினா்கள் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments