FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ரெளடி கைது

Updated On : 22 ஜூலை 2026, 2:17 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டதாக ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பெருமாள்புரத்தை சோ்ந்தவா் இசக்கிப்பாண்டி மகன் இசக்கிமுத்து (27). இவா் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையங்களில் உள்ளது.

கடந்த ஆண்டு ஆறுமுகனேரி காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் பூஜாரி முருகேசனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை இசக்கிமுத்து, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளை காட்டி ரகளை செய்து, பூஜாரி கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்பவா்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி போலீஸாா், இசக்கிமுத்து மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments