FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:19 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி ரோச் பாா்க் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் திருமுருகன் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பு, சோதனை மேற்கொண்டனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் (27) என்பவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா் விற்பதற்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments