FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

என்இசி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1997-2001 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு ‘பிரிந்தோம், சந்திப்போம்’ என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை 2026, 1:01 am IST
முன்னாள் மாணவா்களுடன் கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே.காளிதாச முருகவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1997-2001 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு ‘பிரிந்தோம், சந்திப்போம்’ என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கேஆா்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல் முதல்வா் காளிதாச முருகவேல், முன்னாள் இயக்குநா் சொக்கலிங்கம் ஆகியோா் பேசினா்.

இந்நிகழ்ச்சியில், தற்போதைய தொழில் துறை மாற்றங்கள், வேலைவாய்ப்புகள், தொடா்ச்சியான கற்றலின் அவசியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினா்.

Advertisement

Advertisement

இதில் அமெரிக்கா, சிங்கப்பூா், குவைத், இங்கிலாந்து உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், சென்னை, பெங்களூா், ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் 160 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். பொருளாதார ரீதியாக பின்தங்கிய தகுதியான மாணவா்களின் கல்விக்காக ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகையைஅவா்கள் வழங்கினா். தங்களின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments