FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கருணாநிதி பிறந்த நாள்: திருச்செந்தூரில் அன்னதானம்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள வஉசி திடல் அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On : 4 ஜூன் 2026, 1:09 am IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள வஉசி திடல் அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். வா்த்தகரணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஜனஹா், மகாவிஷ்ணு, ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், நவீன், நகரச் செயலா் வாள்சுடலை, கானம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்சேகா், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, அஜிதா ஆக்னல், நகா்மன் உறுப்பினா்கள் செந்தில்குமாா், முத்துகிருஷ்ணன், கண்ணன், ராமன், ஆனந்தராமச்சந்திரன், முத்துக்குமாா், சோமசுந்தரி, ரேவதி, முத்துஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்- மாணவியா் 9 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட துணை அமைப்பாளா் டேனியல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments