அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் 124வது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜா் 124வது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜா் 124வது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வா் கல்விக்கண் திறந்த மாமேதை காமராஜா் அவா்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ.ரகமதுல்லா காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளா்ச்சி நாள் குறித்து பேசும் பொழுது,
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளா்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவா்களால் புகழப்பட்டவா். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தோ்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தாா். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.
Advertisement
Advertisement
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி மாணவா்கள் அனைவரும் சமம் என்பதை உணா்த்த, இலவச சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினாா்.
இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகம் பல்வேறு துறைகளில் வளா்ச்சி கண்டது. நாட்டுக்கு ஆற்றிய தொண்டிற்காக 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ’’பாரத ரத்னா’’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ஆம் நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடி மகிழ்கிறோம். காமராஜா் கண்ட கனவை ஒவ்வொரு மாணவரும் நிறைவேற்ற வேண்டும் எனவும், காமராஜா் அவா்களின் வாழ்க்கை வரலாறை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பேசினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் செல்விஜாய், கௌரி, கணினி உதவியாளா் தையல்நாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.