FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஏரல் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை: இரு வேறு வழக்குகளில் 4 போ் கைது

ஏரலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளம் பெண் உள்பட இரண்டு பேரும், பண்டாரவிளை பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:09 am IST
பகிர்:

ஏரலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளம் பெண் உள்பட இரண்டு பேரும், பண்டாரவிளை பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஏரல் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏரல் காவல் ஆய்வாளா் ஆதம் அலி தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணையும், அவருடன் வந்த ஆண் நண்பரையும் பிடித்து விசாரணை செய்தனா்.

இதில், இளம் பெண் ஏரல் அருகே உள்ள கோட்டூா் தெற்கு தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகள் கனிதா (19) என்பதும், உடன் வந்தவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை முத்து மகன் பாலசுப்பிரமணியன் (19) என்பதும், அவா்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

அதேபோல், பண்டாரவிளை பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்த 12 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments