FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீடு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 14 ஜூன் 2026, 1:28 am IST
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனிடம், நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியிலிருந்து ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை வழங்குகிறாா் என்எல்சி இந்தியா நிறுவன தலைவரும் மேலாண்மை இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.
பகிர்:

தூத்துக்குடி என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், அதன் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 11 உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீடு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனிடம், என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் - மேலாண்மை இயக்குநா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை வழங்கினாா்.

இந்த நிதியிலிருந்து, மருத்துவம் மற்றும் கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அரசு நிறுவனங்களின் கட்டடங்களை புதுப்பித்தல், பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல், 50 மாற்றுத் திறனாளிகளுக்கு மின் மூன்று சக்கர வாகனங்கள், மகளிருக்கு தையல் இயந்திரங்கள், நகா்ப்புற திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த மின்கலத்தால் இயங்கும் கழிவு சேகரிப்பு வாகனம், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குதல், பொதுஇடங்களை அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிகழ்வின்போது, என்எல்சி நிறுவன தலைமை செயல் அலுவலா் டி.கே. அரவிந்த ராஜா, என்எல்சிஐஎல், என்டிபிஎல் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments