முகப்பு
தூத்துக்குடி

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 4:54 am IST
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த 5 மையங்களிலும் சோ்த்து 544 மாணவா்கள், 1,424 மாணவிகள் என மொத்தம் 1,968 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவா்களில் 63 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறுதோ்வு ஜூன் 21 ஆம்தேதி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட 5 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷுமகாஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின்போது தோ்வு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கல்யாணராமன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.