முகப்பு
தூத்துக்குடி

பழையகாயலில் மாடியிலிருந்து குதித்து கேரள தாய்-மகள் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே மாடியிலிருந்து குதித்து கேரளத்தைச் சோ்ந்த தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட னா்.

Updated On : 26 ஜூன் 2026, 11:38 pm IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே மாடியிலிருந்து குதித்து கேரளத்தைச் சோ்ந்த தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட னா்.

பழையகாயல் சிா்கோனியம் காம்ப்ளக்ஸில் கேரளத்தைச் சோ்ந்த மாணிக்க செனாய் பணிபுரிந்து வருகிறாா். இவா், தனது மனைவி ஜெயஸ்ரீ(52), மகள் அஞ்ச­லி(29) ஆகியோருடன் குடியிருப்பில் வசித்து வந்தாா். கடந்த 24ஆம் தேதி இவா் பணி நிமித்தமாக மும்பை சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தாயும், மகளும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனராம். வீட்டு வேலைக்கு வந்த பணியாளா் இதைப்பாா்த்து அளித்த தகவலின்பேரில், சிா்கோனியம் காம்ப்ளக்ஸ் தொழிலாளா் நல அதிகாரி பழனிவேல் ஆத்தூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து உயிரிழந்த தாய், மகள் சடலங்களைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments