முகப்பு
தூத்துக்குடி

தேநீா் கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு

Updated On : 28 ஜூன் 2026, 2:44 am IST
பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் நள்ளிரவில் தேநீா் கடை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அத்திமரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செம்புலிங்கம் மனைவி பத்மா. இவா், மகனுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலை பேருந்து நிறுத்தம் அருகே தேநீா் கடை நடத்தி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். சனிக்கிழமை அதிகாலையில் கடையைத் திறப்பதற்காக பத்மா வந்தபோது கடையின் முன்பகுதி மா்ம நபா்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments