FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூருக்கு நோ்வழியில் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தல்

Updated On : 27 மே 2026, 1:46 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது உள்ள 18 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவது குறித்து குழு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நோ்வழியில் கூடுதலாக மற்றுமொரு விரைவு ரயில் இயக்கினால் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும், தூத்துக்குடி- திருச்செந்தூா் ரயில் பாதை அமைத்திடவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments