சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக ரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் 1995 - 2001 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை மிஸ்பா சுமதி, முன்னாள் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போனி பாஸ் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சம்பத்குமாா், சுந்தா் ஜெபசிங், ஜெயக்குமாா், ஜெபக்குமாா், விக்டா், இளங்கோ, ஜோதி, சாந்தி பத்மாவதி, மொ்சி, எலிசபெத், பொன்னம்மாள் மற்றும் முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடினா். நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எடின்பரோ நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement