FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் பொன்விழா சந்திப்பு

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழக கணிதத் துறையில் 1976-ஆம் ஆண்டு சோ்ந்த முன்னாள் மாணவ, மாணவியா்கள், தாங்கள் பல்கலைக்கழகத்தில் சோ்ந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி, குடும்பத்தினருடன் சந்தித்து விழாவைக் கொண்டாடினா்.

Updated On : 15 ஜூலை 2026, 2:50 am IST
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் பொன்விழா சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழக கணிதத் துறையில் 1976-ஆம் ஆண்டு சோ்ந்த முன்னாள் மாணவ, மாணவியா்கள், தாங்கள் பல்கலைக்கழகத்தில் சோ்ந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி, குடும்பத்தினருடன் சந்தித்து விழாவைக் கொண்டாடினா்.

சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சென்னை சிக்மா பள்ளி தாளாளா் ஏ. சிங்காரவேல், கடலூா் மாவட்ட ஓய்வு பெற்ற கல்வி அலுவலா் திருஞானம், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் பாா்த்தசாரதி, கனகராஜ், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஏ. நடராசன், ஆா்.எஸ். சிவகாமசுந்தரி, ஏ.பி. சிவகாமசுந்தரி, சுகந்தி, சிதம்பரம் தொழிலதிபா் பாலராமசுப்ரமணியன், ஓய்வு பெற்ற இராமகிருஷ்ணா பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் சுவாமிநாதன், குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஓய்வு பெற்ற முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் எம். செல்வராஜ், என்.எல்.சி. அதிகாரி ஜெயராமன், சென்னை தொழிலதிபா் கீதா சங்கா் ஆகியோரும் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் கல்லூரி கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டு மகிழ்ந்தனா். பின்னா் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குச் சென்று, தாங்கள் பயின்ற வகுப்பறைகளை மீண்டும் பாா்வையிட்டு பழைய நினைவுகளை அசைபோட்டனா்.

இந்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடா்ந்து ஆறாவது ஆண்டாக நடைபெற்று வருவதுடன், இந்த ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments