பைக் விபத்தில் தனியாா் ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சிவா (27). இவா் தூத்துக்குடி, அண்ணா நகரில் உள்ள வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து, தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பாடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்றபோது, மேலூா் ரயில் நிலையம் அருகே உள்ள உழவா் சந்தை பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
வடபாகம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.