குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கோவில்பட்டியில் கடன் தொல்லை காரணமாக தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்ற வழக்கில் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் எண்-1 திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இலுப்பையூரணியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் தேவிகுமாா் (43). இவா், கடன் தொல்லை காரணமாக கடந்த 26.3.2020 அன்று தனது மகள்கள் சைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ரியானா(6) ஆகியோா் இருவரையும் கிணற்றில் வீசிக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, தேவிகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் எண் 1-இல் நடைபெற்று வந்தது.
Advertisement
Advertisement
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி தாண்டவம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தேவிகுமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.