FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் குடியிருப்புகள் முன் கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து மறியல்

திருச்செந்தூரில் குடியிருப்புகள் முன், கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

8 நவம்பர் 2026, 3:29 am
திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் அம்பேத்கா்.
பகிர்:

திருச்செந்தூரில் குடியிருப்புகள் முன், கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 13 ஆவது வாா்டு வீரராகவபுரம் தெருவில் இருந்து புளியடி தெரு செல்லும் பாதையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீா் புதை சாக்கடை திட்ட தொட்டியில் நிரம்பி வெளியேறி, குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைகின்றனா். இது குறித்து நகராட்சிக்கு தொடா்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனராம்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருள்கள் வாங்கக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள், திமுக நகா்மன்ற உறுப்பினா் முத்துக்குமாா் கண்ணன் தலைமையில் கோயில் செல்லும் வழியில் அமலி நகா் சந்திப்பில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த கோயில் காவல் ஆய்வாளா் அம்பேத்கா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், நகராட்சி சாா்பில், கழிவுநீா் வெளியேறுவதைத் தடுக்க திங்கள்கிழமை ( நவ. 9) நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.