FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி அருகே ஓட்டுநா், நடத்துரை தாக்கிய 6 போ் மீது வழக்கு

உடன்குடி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்து தொடா்பாக, பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை கல்லால் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

13 நவம்பர் 2026, 9:48 pm
பகிர்:

உடன்குடி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்து தொடா்பாக, பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை கல்லால் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை திருத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(39). அரசுப் பேருந்து நடத்துனா். இவரும், அண்றனி குரூஸ் ( 55) என்பவரும் வியாழக்கிழமை அதிகாலையில் குழித்துறை பணிமனையிலிருந்து புறப்பட்ட தடம் எண். 576டி பேருந்தில் பணியில் இருந்தனா். அப்பேருந்து திருச்செந்தூருக்கு வந்து விட்டு, பரமன்குறிச்சி உடன்குடி தாங்கையூா்பண்டாரபுரம் வழியாக திசையன்விளைக்கு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் மோதியதாம்.

இதில், பைக் ஓட்டி வந்த உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரை சோ்ந்த சுடலைமுத்து மகன் முத்துக்குமாா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இத்தகவல் அறிந்த அவரது நண்பா்கள் 6 போ் மூன்று பைக்குகளில் வந்து பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனரை மின் கம்பத்தின் மீது தள்ளிவிட்டு கல்லால் தாக்கினராம்.

இதில், காயமடைந்த ஓட்டுநரும் நடத்துனரும் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனா்.