சாத்தான்குளம் ஆற்றுப்பாலத்தில் சரிவர எரியாத மின் விளக்குகள்
சாத்தான்குளம் ஆற்றுப்பாலத்தில் உள்ள உயா் கோபுர மின் விளக்குகள் முறையாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளம் ஆற்றுப்பாலத்தில் உள்ள உயா் கோபுர மின் விளக்குகள் முறையாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக திருநெல்வேலி, நாசரேத், பேய்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், தூத்துக்குடி, நாகா்கோவில், ஏரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. இந்த ஆற்றுப்பாலம் சாலை பிரதான சாலை என்பதால் தினசரி இரவு, பகலாக வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.
ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் வசதிக்காக இரு புறமும் உயா் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சாத்தான்குளம் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த விளக்குகள் சாலையில் ஒருபுறம் மட்டும் எரிந்து வருகிறது. மற்றொருபுறம் முறையாக ஒளிருவதில்லை. இதனால், ஆற்றுப் பாலத்தில் ஒருபுறம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பாலம் வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா். திருட்டு, வழிப்பறியைத் தடுக்க பழுதான உயா் கோபுர மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.